ராஜீவ் மேனன் இயக்கிய சர்வம் தாள மயம் படத்திற்கு பின்னர் ஜிவி பிரகாஷ் நடித்துவரும் புதிய படம் வாட்ச்மேன். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

Advertisment

sfadgdz xshn

இந்நிலையில் கடந்த வாரம் இதன் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நேற்று இந்த திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஒரு நாய் தனது வாயில் நானும் காவலாளி தான் (I am a Chowkidar too) என்று எழுதப்பட்ட ஒரு அட்டையை வாயில் வைத்துக்கொண்டு நிற்பது போல உள்ளது.

நேற்று பிரதமர் மோடி உட்பட பல பாஜக தலைவர்களும் தங்களது ட்விட்டர் கணக்கில் தங்கள் பெயருக்கு முன்னால் "சவுக்கிதார்" என போட்டுக்கொண்டனர். காவலாளி என அர்த்தம் கொண்ட அந்த வார்த்தை நேற்று இந்தியா அளவில் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் அதே வாசகத்துடன் வெளியான இந்த படத்தின் போஸ்டர் தற்போது சமூகவலைத்தளங்களில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.