/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/V1.jpeg)
சினிமாவிலும் அரசியலிலும் பயணித்து வரும் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்துள்ளார். இதனிடையே தனது த.வெ.க. கட்சிக் கொடியை சமீபத்தில் அறிமுகம் செய்தார். ‘தி கோட்’ படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்க யுவன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பலரும் நடித்திருக்க, மறைந்த விஜயகாந்த்தை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் நடிக்க வைத்துள்ளனர். இப்படத்திலிந்து வெளியான நான்கு பாடல்களும் கலவையான விமர்சனம் பெற்றிருக்க, படத்தின் ட்ரைலரும் விஜய் பிறந்தநாளுக்கு (22.6.2024) வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட வீடியோவும் யூட் டியூப்பில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் படக்குழு ஹைதரபாத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தியது. அதில் அர்ச்சனா கல்பாத்தி, வெங்கட் பிரபு, யுவன், பிரசாந்த், சினேகா, லைலா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு படத்தை பற்றி சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டனர். விஜய்யின் அரசியல் வருகையால் படத்தின் ஸ்கிரிப்ட் எழுத அழுத்தம் இருந்ததா? என்ற கேள்விக்கு வெங்கட் பிரபு பதில் கூறியுள்ளார்.
வெங்கட் பிரபு “படத்திற்கு எந்த விதமான அழுத்தமும் இல்லை, படத்தில் அரசியல் பஞ்ச் டயாலாக்கும் இல்லை. படத்திற்கு தேவையான விஷயங்கள் மட்டும்தான் நாங்கள் பண்ணியுள்ளோம். விஜய்யும் அரசியல் பஞ்ச் டயலாக் வேண்டும் என்று எங்களிடம் சொல்லவில்லை. அவருக்கு சினிமாவை மிகவும் பிடிக்கும். சமீபத்தில் அவர் ஹைதரபாத் லோக்கல் தியேட்டரில் படம் பார்த்துள்ளார், அந்த அளவிற்கு சினிமாவை விரும்பக் கூடியவர். அரசியலையும் சினிமாவையும் மிக்ஸ் செய்துகொள்ளமாட்டார். ஆடியன்ஸ் வந்து கொண்டாடுவதைதான் அவரும் விரும்புவார். அவரின் அரசியலில் ஈடுபடபோவதால் கடைசியாக இரண்டு படங்களை வைத்துள்ளார். அதனால்தான் ரசிகர்கள் கொண்டாட இந்த படத்தை எடுத்துள்ளோம். இது விஜய்க்கு பிரியாவிடை கொடுப்பதுபோல் இருக்கும். அதனால் மக்கள் அவரை கொண்டாடும் விதமாக பெரிய ட்ரீட்டாக இந்த படம் அமையும். நான் 90களிலுள்ள நடிகர்களை தேர்வு செய்து அவர்களை ரீ யூனியன் செய்ய வேண்டும் என்று நினைத்து, விஜய், பிரசாந்த், பிரபு தேவா, சிநேகா, லைலா உள்ளிட்ட நடிகர்களை கொண்டு நாஸ்டால்ஜிக் உணர்வை கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)