/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/140_30.jpg)
தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக வலம் வந்த ஆர்.கே. செல்வமணி தற்போது திரைப்பட இயக்குநர் சங்கம் மற்றும் ஃபெஃப்சி சங்கத்தில் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஆர்.கே செல்வமணி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ அருள் அன்பரசு ஆகியோர் பைனான்சியர் போத்ரா குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சினிமா பைனான்சியர் போத்ரா ஆர்.கே. செல்வமணி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ ஆகியோர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தபோது, ஆர்.கே செல்வமணி மற்றும் அருள் அன்பரசு இருவரும் விசாரணைக்கு ஆஜராகாததால் இருவருக்கும் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்டை பிறப்பித்தது சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம்.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ள நிலையில், ஆர்.கே. செல்வமணி ஆஜராகாததால் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து, வழக்கு விசாரணையை வருகிற செப்டம்பர் 22 ஆம்தேதிக்கு தள்ளி வைத்துள்ளது சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)