ADVERTISEMENT

மோசடி வழக்கு; விஜய் பட நடிகைக்கு மீண்டும் பிடி வாரண்ட்

03:49 PM Apr 08, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரபல பாலிவுட் நடிகையான அமீஷா பட்டேல் தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்தில் நடித்துள்ளார். குணால் குரூமர் என்பவருடன் இணைந்து 'டெசி மேஜிக்' (Desi Magic) என்ற இந்தி படத்தை தயாரிக்க முடிவு செய்து, அஜய்குமார் சிங் என்பவரிடம் ரூ.2.5 கோடி கடன் வாங்கியிருக்கிறார்.

அப்போது 2018ல் இப்படம் திரைக்கு வந்துவிடும் என்றும் அப்போது பணத்தை திருப்பி தந்து விடுகிறேன் என்றும் அமீஷா கூறியுள்ளார். பின்பு 2013ல் படப்பிடிப்பை தொடங்கினார்கள். ஆனால், இவர்கள் திட்டமிட்டபடி படம் முடிக்கப்படவுமில்லை திரைக்கும் கொண்டு வரவில்லை. இதனால் அஜய்குமார் சிங் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். வாங்கிய கடன் பணத்துடன் வட்டியையும் சேர்த்து ரூ.2.5 கோடி மற்றும் ரூ.50 லட்சம் என இரண்டு செக் அமீஷா பட்டேல் கொடுத்துள்ளார். அமீஷா கொடுத்த செக்கை அஜய் வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் செக் பவுன்ஸ் ஆகியுள்ளது. இதனால் அதிர்ச்சியான அஜய், நீதிமன்றத்தை நாடி, அமீஷா பட்டேல் மற்றும் குணால் குரூமர் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அமீஷா பட்டேலுக்கு பல தடவை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், அமீஷா நீதிமன்றத்தில் ஒருமுறை கூட ஆஜராகாததால் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த விசாரணையில் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம். இந்த நிலையில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. வழக்கை விசாரித்த ராஞ்சி நீதிமன்றம், அமீஷா பட்டேல் மற்றும் குணால் குரூமர் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பித்தது. மேலும் வருகிற 15 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.

இதே போல் யுடிஎப் டெலி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திடம் 32.25 லட்சம் கடன் வாங்கி, அவர்களுக்கு திருப்பி கொடுத்த செக்கில் பணம் இல்லாததால் மோசடியில் ஈடுபட்டதாக கூறி அந்நிறுவனம் மத்தியப் பிரதேச போபால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து. போபால் நீதிமன்றம் அவருக்கு எதிராக ஜாமீனில் வரக்கூடிய வாரண்ட் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT