warner bros

Advertisment

கரோனா அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் உள்ள சினிமாதுறைமிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் மிகவும் பிரபலமான, லாபகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சினிமா தயாரிப்பு நிறுவனம் வார்னர் ப்ரதர்ஸ். இந்த வருடம் பல பிரம்மாண்ட படங்களை வெளியிட திட்டமிட்டிருந்தது. ஆனால், கரோனாவால் பல படங்களில் ரிலீஸ் தேதி மாற்றி அமைத்து தற்போது இன்னும் கரோனா பிரச்சனை முடிவடையாததால் படங்கள் எதுவும் ரிலீஸாகாமல் உள்ளது.

உலகம் முழுவதும் சில நாடுகளில் கரோனா அச்சுறுத்தலையும் மீறி சினிமா திரையரங்குகள் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான டெனட் படத்தை திரையரங்கங்கள் திறக்கப்பட்ட நாடுகளில் மட்டும் ரிலீஸ் செய்தது. இதன்பின் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாடுகளிலும் திரையரங்கங்கள் திறக்கப்படும் என்று எதிர்பார்த்தது. ஆனால், ரிலீஸ் செய்யப்பட்ட நாடுகளிலேயே முதல் வாரத்திற்கு பின் டெனட் படம் சரியாக ஓடவில்லை. இதற்கு காரணம் கரோனா அச்சுறுத்தல் என்பதால், இதன்பின் ரிலீஸுக்கு தயாரக வைத்திருந்த படங்களில் ரிலீஸ் தேதிகளை மீண்டும் ஒத்திவைத்துள்ளது நிறுவனம்.

Advertisment

இதுமட்டுமல்லாமல் கரோனா நெருக்கடி காரணமாக ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட, அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய திரையரங்கச் சங்கிலியான ரீகல் சினிமாஸ், தங்களின் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளைத் தற்காலிகமாக மூடுவதாக அறிவித்தது. பிரிட்டனில் இருக்கும் சினிவேர்ல்ட்தான் ரீகல் சினிமாஸின் தாய் நிறுவனம். சினிவேர்ல்டும் பிரிட்டனில் இருக்கும் தங்களது திரையரங்குகளை மூடுவதாக அறிவித்துள்ளது.

இதுபோன்ற பல்வேறு காரணங்களை கருத்தில்கொண்டு வார்னர் ப்ரதர்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளது. டிசம்பர் 2020-ல் வெளியாகவிருந்த 'ட்யூன்' தற்போது அக்டோபர் 1, 2021 அன்று வெளியாகும். 'தி பேட்மேன்' அக்டோபர் 1, 2021 அன்று வெளியாகவிருந்தது. தற்போது மார்ச் 4, 2022 அன்று வெளியாகும். ஜூன் 3, 2022ல் வெளியாக இருந்த 'தி ஃப்ளாஷ்' நவம்பர் 4, 2022க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 'ஷஸாம் 2' நவம்பர் 4, 2022 என்கிற தேதியிலிருந்து ஜூன் 2, 2023க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 22, 2021 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த 'ப்ளாக் ஆடம்' திரைப்படமும் தற்போது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.