sajid wajid

பாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளரும், சல்மான் கானின் ஆஸ்தானஇசையமைப்பாளருமான வாஜித்கான்காலமானார்.

Advertisment

பிரபல தபேலா கலைஞர்உஸ்தாத்ஷராஃபத் அலிகானின் இரு மகன்களில் ஒருவரானஇவர், ‘தபாங்’, ‘ஏக் தா டைகர்’, ‘வான்டட்’ உள்ளிட்ட பல படங்களுக்கு தனதுசகோதரருடன் இணைந்துஇசையமைத்துள்ளனர்.

Advertisment

1998ஆம் ஆண்டு சல்மான்கான் நடித்த ‘பியார் கியா தோ தர்ணா க்யா’ படத்தின் மூலம் பாலிவுட்டில் இசையமைப்பாளர்களாக அறிமுகமான சாஜித்- வாஜித் சகோதரர்கள் அதன்பிறகு சல்மான்கானின் ஆஸ்தான இசையமைப்பாளர்களாக விளங்கினர்.

இந்நிலையில் சாஜித்- வாஜித் சகோதரர்களில் ஒருவரான வாஜித் கான் இன்று (ஜூன் 1) உடல்நலக் குறைவால் காலமானார். வாஜித் கான், கரோனா தொற்று காரணமாக மறைந்தார் எனத் தகவல் வெளியானதை அடுத்து அவரது சகோதரர் சாஜித் கான், வாஜித் கானுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால், அவர் மாரடைப்பின் காரணமாக மரணமடைந்தார் எனத் தெரிவித்துள்ளார்.

வாஜித் கானின் மறைவிற்குபாலிவுட் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.