தெலுங்கு பட இயக்குநர்களை புகழ்ந்த வி.டி.வி. கணேஷ்

vtv ganesh about telugu directors

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் வி.டி.வி கணேஷ், தற்போது தமிழில் ஜெயம் ரவியின் ‘பிரதர்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற தீபாவளிக்கு(31.10.2024) திரைக்கு வரவுள்ளது. மேலும் தெலுங்கில் ‘பலே உன்னடே’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை(13.09.2024) திரையரங்கில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் ‘பலே உன்னடே’ படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது. அதில் படக்குழுவினர்கள் பங்கேற்று படத்தை பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

அந்த வகையில் வி.டி.வி கணேஷ் பேசுகையில்,“தெலுங்கு பட இயக்குநர்கள் அவர்களின் வேலையை மிகவும் விரும்பி செய்வார்கள். எந்த அளவு வேண்டுமானாலும் இறங்கி வேலை செய்வார்கள். அவர்களின் சிந்தனையும் செயல்பாடுகளும் வித்தியாசமாக இருக்கும். நான் தமிழில் பல முன்னணி இயக்குநர்களிடம் பணியாற்றியுள்ளேன். ஆனால் தெலுங்கு இயக்குநர்களில் சிலர் மிகவும் திறமை மிக்கவர்கள், வேகமாக சிந்தித்து செயல்படுவார்கள். அதுதான் என்னை ஈர்த்தது” என்றார்.

actor ganesh kollywood tollywood
இதையும் படியுங்கள்
Subscribe