/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vjs-im.jpg)
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகன்விஜய்சேதுபதி. இருப்பினும்கதைமற்றும் கதாபாத்திரம் பிடித்திருந்தால், கதாநாயகனாக மட்டுமில்லமால் மற்ற முக்கியபாத்திரங்களில் நடிப்பவர். அவ்வாறு ரஜினிநடித்த 'பேட்ட' படத்தில்வில்லனாகநடித்தார். தற்போது விஜய்யின் 'மாஸ்டர்' படத்தில்முக்கியகதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சிலபடங்களில் சிறப்புதோற்றத்திலும் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.
விஜய் சேதுபதிதமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். அடுத்ததாக இந்தி திரையுலகநட்சித்திரமானஆமிர் கானுடன் லால் சிங் சேட்டா என்ற படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த நிலையில்,தான்மலையாளத்தில் நடிக்கும்புதிய படத்தின்போஸ்டரைவெளியிட்டுள்ளார்விஜய் சேதுபதி.
விஜய்சேதுபதிநடிக்கும்இந்த புதிய படத்திற்கு19 (1) (a) எனபெயரிடப்பட்டுள்ளது. இந்தியஅரசியல் சட்டப்பிரிவு19 (1) (a)என்பதுஇந்திய குடிமக்களுக்கு கருத்துரிமை வழங்குவதாகும். முத்தையாமுரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமான800 படத்தில்நடிக்க,விஜய் சேதுபதிக்குகடுமையான எதிர்ப்பு எழுந்தது.அதனால்விஜய்சேதுபதி, அப்படத்திலிருந்து விலகினார். அதைத்தொடர்ந்து கருத்துரிமைபற்றிய விவாதங்கள் எழுந்தன. இந்தநிலையில் விஜய் சேதுபதிகருத்துரிமைதொடர்பான படத்தில் நடிக்கவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . 19 (1) (a) படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் நித்யாமேனன்நடிக்கிறார். வி.எஸ். இந்து இயக்கம் இப்படத்திற்கு, கோவிந்த்வசந்தாஇசையமைக்கிறார். இவர் விஜய் சேதுபதி-திரிஷாநடித்த96 படத்திற்குஇசையமைத்தவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png) 
   Follow Us
 Follow Us