simbu

'வருங்கால தமிழகமே', 'நாளைய முதல்வரே' என தமிழகத்தில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித் உள்ளிட்டோரின் ரசிகர்கள் தங்களின் நாயகர்களை வைத்து போஸ்டர்கள் அடித்து அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்துவார்கள்.

Advertisment

இந்நிலையில், மக்கள் செல்வன் என்று அழைக்கப்படுகிற விஜய் சேதுபதியின் ரசிகர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ‘எங்களுக்கு நேரம் வரும்போது கண்டிப்பாக வருவோம்’ என்று போஸ்டர் அடித்து ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'க/பெ ரணசிங்கம்' படம் அக்டோபர் 2ஆம் தேதி வெளியானது. புதுமுக இயக்குனர் விருமாண்டி இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதி கௌரவத் தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அந்த போஸ்டரில் ‘மக்களில் ஒருவனே, மக்களுக்கான ஒருவனே, எங்கள் மக்கள் செல்வனே! விரைவில் வருக’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment