விஜயநகர அரசர்கிருஷ்ணாதேவராயரின் அரசவையில், விகடகவியாக இருந்தவர் தெனாலி ராமன். இவரின்புத்திசாலித்தனம் மற்றும் சமயோசிதம் குறித்தகதைகள், இன்று வரை குழந்தைகளிடம் மிகவும் பிரபலம்.
தெனாலிராமன் கதைகளை அடிப்படையாகக் கொண்டு, ஏற்கனவே தமிழில்திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. இந்தநிலையில்தற்போது, 'தீர : புத்தி ரித்திசித்தி'என்ற பெயரில், தெனாலிராமனை மையமாக வைத்து, மோஷன் கேப்ச்சர்-அனிமேஷன் படமாக உருவாகியுள்ளது. ஒரு மணி நேரம் 57 நிமிடங்கள் ஓடும் இப்படம், அமேசான் ப்ரைமில் வெளியாகிவுள்ளது.
இப்படத்தில், தெனாலிராமன் கதாபாத்திரத்துக்கு, நடிகர் விஜய் சேதுபதி பின்னணிக் குரல் அளித்துள்ளார். ஏற்கனவே விஜய்சேதுபதி, 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' படத்தில், அயர்ன்மேனுக்குடப்பிங்செய்தார்என்பதுகுறிப்பிடத்தக்கது.