Advertisment

"கவலபடாத மாமா பாத்துக்கலாம்" -தவசிக்கு விஜய் சேதுபதி ஆறுதல் 

vjs

Advertisment

‘கருப்பன் குசும்புக்காரன்' என்ற ஒற்றை வசனத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் தவசி. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில், சூரிக்கு அப்பாவாக இவர் நடித்த கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பெற்றது, ரசிக்கப்பட்டதுஇவர் பாரதிராஜாவின், 'கிழக்கு சீமையிலே' படத்திலிருந்து தனது சினிமா பயணத்தை தொடங்கினார்.

கிடா மீசையில் பல படங்களில் நடித்து வந்த தவசி, தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகவும் மெலிந்து எலும்பும் தோலுமாககாட்சியளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் தவசி குறித்து பேசியவர், புற்றுநோய் பாதிப்பால் அவதிப்படுவதாகவும், மருத்துவ சிகிச்சைக்கு பண உதவி வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்திருக்கிறார். நடிகர் தவசியின் மகன் சமூக வலைதளத்தில் பண உதவி கேட்டு வேண்டுகோள் வைத்தார்.அவரின் நிலையை அறிந்த, திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும், மருத்துவருமான சரவணன்அவருக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி ஆகியோர் நிதியுதவி செய்துள்ளனர். நடிகர் தவசிக்கு முதல்கட்டமாக ரூ.20,000 நிதியுதவி வழங்கப்படும் என்றும், தவசி மற்றும் அவரது உதவியாளருக்கு 3 வேளையும் உணவு வழங்கப்படும் என்றும் நடிகர் சூரி தெரிவித்தார். அவருக்கு தேவையான அடுத்தடுத்த உதவிகளை செய்யவும் தயாராக இருப்பதாக கூறினார். அதேபோல் நடிகர் தவசிக்கு சிவகார்த்திகேயன் சார்பில் ரூ.25,000 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, விஜய் சேதுபதியும் நடிகர்தவசிக்கு உதவியுள்ளார். படப்பிடிப்பில்உள்ளவிஜய்சேதுபதி தனதுநண்பரும், நடிகருமான சௌந்தராராஜா மூலம் தவசிக்குஒரு லட்சம் ரூபாய் அளித்துள்ளார். மேலும் தவசியை, தொலைபேசி மூலம்தொடர்புகொண்ட அவர், "கவலைப்படாத மாமா பாத்துக்கலாம்" எனஆறுதல் கூறியுள்ளார். நடிகர்சௌந்தரராஜாவும், தவசிக்குபத்தாயிரம்ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

actor sivakarthikeyan actor vijay sethupathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe