vj chithra

சின்னத்திரையில் பாண்டியர் ஸ்டோர்ஸ் என்னும் சீரியல் பலருக்கு பரிச்சயமானது, பிரபலமானதும் கூட. இதில் முல்லை என்னும் கதாபாத்திரத்தில் நடித்த விஜே சித்ராவுக்கு இந்த கதபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பெரும் ரசிகர் கூட்டமே சமூக வலைதளத்தில் உண்டு. மேலும், இவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் குமரன் என்பவருக்கும் ரசிகர்கள் உண்டு. இதுபோல ஜோடியாக பிரபலமான இவர்கள் இருவரையும் ஸ்டார் ஜோடி என்னும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்பது அவருடைய ரசிகர்கள் பலருக்கும் ஏமாற்றமாக அமைந்தது.

Advertisment

அதில் ஒரு ரசிகர் சித்ராவிடம் சமூக வலைதளம் மூலம் கேள்வியாக கேட்டார். அதற்கு விளக்கமளித்துள்ளார் சித்ரா, “ஸ்டார் ஜோடி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்து நடனமாடத் தயாரானேன். எனவே நடனத்துக்காக ஆடைகளையும் பாடல்களையும் தயார் செய்தேன். ரிகர்சலுக்கும் செல்லும் நேரத்தில் சேனலில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர்கள் என்னிடம் "மன்னியுங்கள், இது வேலைக்கு ஆகும் என்று தோன்றவில்லை. ஆனால் நிச்சயம் உங்களுக்கு ஒரு சிறந்த மேடை கிடைக்கும். இது உங்களுக்கான நேரம் இல்லை. உங்கள் மீது பரிதாபமாக உள்ளது" என்று கூறினார்கள்.

Advertisment

அதை கேட்டபோது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால் பிறகு சரியாகி விட்டேன். இப்போது நான் நன்றாக இருக்கிறேன். என் மீது யாரும் பரிதாபப்படுவதை நான் விரும்பவில்லை. எனக்கு நல்ல வாழ்க்கையும், நிறைய அனுபவங்களும் கிடைத்துள்ளது. எனக்குக் கிடைத்த அங்கீகாரம் இன்னும் என்னுடன் தான் இருக்கிறது. அதை என்னிடம் இருந்து யாரும் பறிக்க முடியாது. விரைவில் நான் எழுவேன். தொடர்ந்து உயர்வேன். என்னை நானே பெருமைப் படுத்துவேன்” என்று தெரிவித்துள்ளார்.