
ஏப்ரல் முதல் வாரத்தில் இந்தியாவில் கோலாகலாமாக தொடங்கப்படும் இந்திய ப்ரீமியர் லீக், இந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போய், இந்தியாவில் நடத்த முடியாமல் அமீரகத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
கரோனா அச்சுறுத்தலால் உரிய பாதுகாப்பு வசதிகளை கொண்டு ஒவ்வொரு அணியும் பாதுகாப்பாக தனது வீரர்களை வைத்துக்கொண்டு விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பி வரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்காக தமிழில் தொகுத்து வழங்குபவர்களில் பிரபல தொகுப்பாளினி பாவனாவும் இருக்கின்றார். மும்பையிலுள்ள ஸ்டூடியோவில் பபுல் முறையை பின்பற்றி தங்கள் பணியை கரோனாவிலிருந்து பாதுகாத்து செய்து வருகிறார்.
தற்போது ஐபிஎல் போட்டி தொகுத்து வழங்குவதில் இருந்து விலகியிருப்பதாக பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், தனது பெற்றோருக்கு கரோனா தொற்று பாஸிட்டிவ்வாகி இருப்பதால் அவர்களை பார்த்துக்கொள்வதற்காக சென்னை திரும்புகிறேன் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.