Published on 17/11/2018 | Edited on 17/11/2018

விஜய் - அட்லி கூட்டணியில் மூன்றாவது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இப்படத்தின் செட் அமைக்கும் பணிகள் சமீபத்தில் பூஜையுடன் ஆரம்பித்தது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். குருவி படத்திற்கு பிறகு சுமார் பத்து ஆண்டுகளுக்கு பின் விவேக்கும் விஜய்யும் இணையவுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற கதாபாத்திரங்களையும் படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.