Skip to main content

“உட்கார சொன்னேன். ஆனால் அவர்”- விஜய் குறித்து விவேக் ட்வீட்

Published on 09/07/2019 | Edited on 09/07/2019

மூன்றாவது முறையாக அட்லியும் விஜய்யும் இணைந்து பணி புரியும் படம் பிகில். இந்த படத்தில் விஜய் அப்பா மகன் என இரு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
 

vivek

 

 

இதில் நயன்தாரா, யோகி பாபு, ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, கதிர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தொடர்ந்து விஜய் படத்தில் மூன்றாவது முறையாக ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தை தயாரிக்கிறார்.
 

இந்நிலையில், நேற்று மாலை ஆறு மணிக்கு பிகில் படத்திலிருந்து ஒரு முக்கியமான அப்டேட் விடப்படும் என அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா அறிவித்திருந்தார். மேலும் அந்த அப்டேடானது படத்தின் டீஸர் பற்றியோ, ட்ரைலர், ஆடியோ வெளியிடும் தேதி பற்றியோ இல்லை. அனைவரும் எதிர்பார்த்த வேறு ஒரு முக்கியமான அறிவிப்பை அறிவிக்க இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
 

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் முதன் முதலாக விஜய் பாடுகிறார் என்றும், இதுதான் முதல் பாடல், தலைப்பு வெறித்தனம் என்றும் தெரிவித்தார். அப்போது பாடலாசிரியர் விவேக், இயக்குநர் அட்லி, விஜய் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் அனைவரும் ஒன்றாக இருப்பதுபோன்ற புகைப்படங்கள் வெளியாகின. அதில் விவேக் நாற்காலியில் அமர, விஜய் நின்றுக்கொண்டிருப்பார். இந்த புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டரில் பதிவிடும்போது இதுகுறித்து தெரிவித்துள்ளார் விவேக். அதில், “நான் விஜய்யை உட்கார சொன்னேன். ஆனால், அவர் உட்கார மாட்டேன் என்று சொல்லிவிட்டார். என்னுடைய உயரத்தாலும், கேமரா பிரேம் அட்ஜஸ்மெண்டிற்காக நாற்காலியில் உட்கார வேண்டியதாகிவிட்டது” என்று பதிவிட்டுள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

"செஞ்சுட்டா போச்சு..." ராயப்பனை கையிலெடுத்த அட்லீ

Published on 26/05/2022 | Edited on 26/05/2022

 

atlee directing new film bigil rayappan story

 

'ராஜாராணி' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இயக்குநர் அட்லீ, நடிகர் விஜய்யை வைத்து 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்தார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான பிகில் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, அதில் வரும் ராயப்பன் கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 

 

இந்நிலையில் பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் ப்ரைம் தனது ட்விட்டர் பக்கத்தில் பிகில் படத்தில் வரும் ராயப்பன் காட்சியை பகிர்ந்து முழு திரைப்படமும் ராயப்பனை மையமாக வைத்து எடுக்கப்பட்டால் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள் என்று குறிப்பிட்டிருந்தது. இந்த பதிவை பார்த்த இயக்குநர் அட்லீ "செஞ்சிட்டா போச்சு" என ரீட்வீட் செய்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் தற்போது பெரும் உற்சாகத்தில் உள்ளனர். அட்லீ தற்போது ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பணியை முடித்த பிறகு விஜய்யை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்கவுள்ளார். ஒரு வேலை அந்த படம் ராயப்பனை பற்றிய படமா அல்லது வேறு ஒரு புதிய படத்தில் ராயப்பன் கதையை இயக்கவுள்ளாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

 

 

Next Story

'பிகில்' திரைப்பட பாடகி சங்கீதா சஜித் காலமானார்!

Published on 23/05/2022 | Edited on 23/05/2022

 

 Playback singer Sangeetha Sajid passes away

 

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர்  பின்னணி பாடகி பாடகி சங்கீதா சஜித்.  சிறுநீரக பாதிப்பு தொடர்பாக சிகிச்சை பெற்றுவந்த சங்கீதா சஜித் திருவனந்தபுரத்தில் அவரது சகோதரியுடன் வசித்து வந்த நிலையில் இன்று காலமானர். இன்று மாலை திருவனந்தபுரத்தில் அவரது இறுதி சடங்குகள் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

1996 ஆம் ஆண்டு வெளியான 'மிஸ்டர் ரோமியோ' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியாகி ஹிட் அடித்த 'தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை' என்ற பாடலை சங்கீதா சஜித் பாடியுள்ளார். அதேபோல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'பிகில்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'வெறித்தனம்' பாடலிலும் இன்ட்ரோ போர்ஷனை அவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.