Advertisment

கமல் ஹாசனுக்கு சாதகமாக பேசிய விவேக்

vivek

பல நல்ல சமூக கருத்துக்களை தன் காமெடியின் மூலம் மக்களுக்கு அளித்தவர் சின்ன கலைவாணர் நடிகர் விவேக். நாடெங்கும் பல லட்ச மரக்கன்றுகளை நட்டு பசுமை புரட்சி ஏற்படுத்திய இவர் ஆறுமுகநேரி தனியார் பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கமலஹாசனின் அரசியல் பற்றி பேசுகையில்..."தமிழகத்தில் ரஜினிகாந்த், கேரளத்தில் மம்முட்டி மாதிரி எத்தனை சூப்பர் ஸ்டார்கள் இருந்தாலும் அகில இந்திய அளவில் ஒரே சூப்பர் ஸ்டார் டாக்டர் அப்துல் கலாம் அய்யாதான். ராமேஸ்வரத்தில் அவரது நினைவிடத்தில் இருந்து நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தின் புனித பயணத்தை நாளை மறுநாள் தொடங்க இருக்கிறார். அவருக்கு உற்சாகமான ஆதரவை தெரிவியுங்கள். மேலும் இன்று நாட்டிற்கு நல்ல தலைமை தேவை. அதற்கு எளிமை, மனிதநேயம், தியாக உணர்வு ஆகிய பண்புகள் மிகவும் அவசியம்" என்றார்.

Advertisment
vivek kamalhaasan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe