/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/VP.jpg)
‘பருந்தாகுது ஊர்க்குருவி’ படத்தில் நடித்த விவேக் பிரசன்னா அவர்களை நமது நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். படம் பற்றிய பல்வேறு சுவாரசியமான விசயங்களையும், கதைகளைத்தேர்வு செய்து நடிப்பது பற்றியும் அதோடு நடிகர் விஜய் சேதுபதி பற்றியும் பேசினார்.
விவேக் பிரசன்னா பேசியதாவது “குறும்படத்தில் இருந்து ஆரம்பித்து இன்று பல்வேறு படங்களில் நடித்து வருகிறேன். சிறந்த வாய்ப்புகள் வருகின்றன. அனைத்துமே கடவுளின் அருள் தான். ஒவ்வொரு நாளும் என்னை நான் புதிதாகப் பார்க்கிறேன். ஒரு நடிகனுக்கு முடிவு என்பது கிடையவே கிடையாது. பிரச்சனைகள் வந்தாலும் அவற்றை எப்படி கடந்து செல்வது என்பது பற்றி இந்தப் படம் பேசுகிறது. எப்போதுமே நான் ஸ்கிரிப்ட்டை மட்டும்தான் நம்புவேன். ஸ்கிரிப்ட் நன்றாக இருந்தால் மற்ற அனைத்தும் தானாக நடக்கும்”.
விஜய் சேதுபதி சாதாரணமாக இருப்பதால்தான் ஆச்சரியமான மனிதராக இருக்கிறார். அவர் எப்போதும் இயல்பாகவே இருக்கிறார். அவருக்கு பிடித்ததைச் செய்கிறார். அவரை யாரும் எளிதாக அணுக முடியும். சக மனிதனை நன்றாக கவனித்துக் கொள்ளக் கூடியவர். அவரிடம் உதவி கேட்டு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகம். ஏனெனில் அவரை அனைவரும் நம்புகிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)