vivek portion shoot resuming with vfx in indian 2

Advertisment

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். முன்னதாக இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சென்னை, திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்தது.

இதையடுத்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள படப்பிடிப்பிற்காக படக்குழு தென்னாப்பிரிக்கா மற்றும் தைவான் உள்ளிட்ட நாடுகளில் கமலின் காட்சிகளை படமாக்கி முடித்துள்ளது. அடுத்த மாதம் அடுத்தகட்ட படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளது. ஜூன் மாதத்திற்குள் படத்தின் முக்கியமான காட்சிகள் அனைத்தும் படமாக்கத்திட்டமிட்டுள்ளது. முன்னதாக இப்படத்தில்நடித்த மறைந்த நடிகர் விவேக்கின் கதாபாத்திரத்தில் வேறொரு நடிகரை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியானது. அதில் குருசோமசுந்தரம் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் விவேக்கை நவீன டெக்னாலஜி மூலம் திரையில் கொண்டுவர ஷங்கர் திட்டமிட்டுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் இப்படத்தில் நடித்த மறைந்த நடிகர்நெடுமுடி வேணுவையும் கொண்டுவர முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருவரின் கதாபாத்திரங்கள் சம்பந்தமான மீதமுள்ள காட்சிகளை வி.எப்.எக்ஸை பயன்படுத்தி படமாக்கவுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இதற்கு முன்னதாக ரஜினி நடிப்பில் வெளியான 'கோச்சடையான்' படத்தில் நடிகர் நாகேஷை நவீன டெக்னாலஜி மூலம் திரைக்கு கொண்டு வந்திருந்தார்கள். அவரைப் போல பேசக்கூடிய ஒருவரை வைத்து அதில் அவருக்கு டப் செய்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.