Advertisment

அபராதம் விதித்த போலீசாருக்கு நன்றி தெரிவித்த நடிகர் விவேக் ஓபராய்!

Vivek Oberoi

பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், காதலர் தினத்தன்று தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோ பதிவில், அவர் முகக்கவசம், தலைக்கவசம் இல்லாமல் பயணித்தது தெரியவந்தது. இதனையடுத்து ரசிகர்கள், விவேக் ஓபராயிடம், 'பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய நீங்களே இதுபோன்ற செயலில் ஈடுபடலாமா' எனக் கேள்வி எழுப்பினர். சிலர் விவேக் ஓபராயின் இச்செயலைக் கண்டித்தும் பதிவிட்டனர்.

Advertisment

இந்த நிலையில், இந்த வீடியோ பதிவு மும்பை போலீசாரின் கவனத்திற்குச் சென்றது. இதனையடுத்து, நடிகர் விவேக் ஓபராய் மீது நேற்று வழக்குப் பதியப்பட்டு 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து நடிகர் விவேக் ஓபராய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

Advertisment

அதில், "பாதுகாப்பு என்பது மிக முக்கியம் என்பதை எனக்கு உணர்த்திய மும்பை போலீசாருக்கு நன்றி. கவனமாக இருங்கள். தலைக்கவசம் மற்றும் முகக்கவசம் அணியுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

vivek oberoi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe