Advertisment

அஜித்தை தொடர்ந்து விஜய்யுடன் மோதும் பிரபல நடிகர்

Vivek Oberoi play negative role vijay thalapathy66 film

Advertisment

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் 'பீஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தைசன் பிக்சர்ஸ்நிறுவனம் தயாரிக்கிறது. இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வரும் படக்குழு, ஏப்ரல் மாதம் பீஸ்ட் படத்தை திரையரங்கில் வெளியாகும் என அறிவித்துள்ளது.

இப்படத்தை தொடர்ந்துநடிகர் விஜய் பிரபல தெலுங்கு இயக்குநர்வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'தளபதி 66' படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளஇப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார்.இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தளபதி 66 படத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் வெளியான 'விவேகம்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து தற்போது 'தளபதி 66' படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்தஎந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகாத நிலையில் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.

actor vijay thalapathy 66 Vamshi Paidipally vivek oberoi
இதையும் படியுங்கள்
Subscribe