style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பல்வேறு வெற்றி படங்களை தயாரித்த பாரம்பரிய நிறுவனமான 'விஜயா புரொடக்க்ஷன்ஸ்' சார்பில் B.பாரதி ரெட்டி தயாரிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் விஜய்சந்தர் இயக்கவுள்ளார். இந்த படத்தில் நாயகியாக ராஷி கண்ணா, காமெடியனாக சூரி ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் தற்போது இளம் இசையமைப்பாளர்களான விவேக் மெர்வின் ஆகியோர் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளனர். விவேக் சிவா மற்றும் மெர்வின் சாலமன் ஆகியோர் வடகறி படத்தில் அறிமுகமாகி பின்னர் அதனை தொடர்ந்து புகழ் ,டோரா, குலேபகாவலி ஆகிய படங்களில் இசையமைத்து பிரபலமாகினர். மேலும் இவர்களின் இசையில் சமீபத்தில் வெளிவந்த ஒரசாத பாடல் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் 2 படங்களில் விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.