Skip to main content

கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்த விவேக்

Published on 21/02/2018 | Edited on 21/02/2018
vv


பிக் பாஸ் சமயத்திலுருந்தே தனது அரசியல் பிரவேசத்தின் அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்ட உலகநாயகன் கமல்ஹாசன் இன்று ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அரசியல் பயணத்தை தொடங்கியிருக்கும் கமல்ஹாசனுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், நடிகர் விவேக்கும் அவரது டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். "இன்று முதல் கலாம் தலத்தில், புதிய தளத்தில், வளம் சேர்க்க, களம் காணப் புறப்படும் கமல் அவர்களுக்கு, உளம் நிறைந்த வாழ்த்துக்கள்" என்று வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்