vivek

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்விவேக். இவர்,நடிகராகமட்டுமின்றிசமூகசெயற்பாட்டாளராகவும் இருந்து வருகிறார். தொடர்ந்து, தமிழகம் முழுவதும் 'பசுமை கலாம்' திட்டத்தின் மூலம் மரக்கன்றுகளைநட்டு வரும்விவேக்சமூகவலைதளங்களிலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார்.

இந்த நிலையில், ரசிகர் ஒருவர், 'ரன்'படத்தில்வரும்"சாதாகாக்காவசொன்னா,அண்டங்காக்காவுக்கு கோபம்வருது" எனும் காமெடிகாட்சியின்டிக்டாக்வீடியோவைபதிவிட்டு, விவேக்கைடேக்செய்திருந்தார். அதில்இன்னொரு ரசிகர், விவேக்கின் மீது பெரும் மதிப்பு இருப்பதாகவும், ஆனால் இது போன்றுபெற்றோர்களை இழிவு செய்யும்காட்சிகளை சகித்துக் கொள்ளமுடியவில்லைஎனவும்கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, விவேக்அந்த ரசிகருக்குப் பதிலளித்துள்ளார். அதில்,பெற்றோரைஇழிவுபடுத்தினால் அவலநிலை ஏற்படுமென்பதையே முடிவு கருத்தாக, அந்த நகைச்சுவை காட்சிகள் தெரிவிப்பதாகவிவேக் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக விவேக்தனதுபதிலில், "பெற்றோரை இழிவுபடுத்திய காரணத்தால் கடைசியில் கூவத்தில் விழுந்து, ஒரு கிட்னி இழந்து, தெருவில் குஷ்ட ரோகி பிச்சைக்காரனுடன் படுத்துக் கிடக்கும் அவல நிலை ஏற்பட்டது. இதுவே முடிவு கருத்து" எனக் கூறியுள்ளார்.