Skip to main content

"எங்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி" - பிரபல இசையமைப்பாளர்கள் பேச்சு

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

Vivek and Mervintalk about enna solla pogirai movie

 

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஷ்வின், இயக்குநர் ஹரிஹரன் இயக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில் அவந்திகா, தேஜஸ்வினி இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். ட்ரென்ட்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு விவேக் மற்றும் மெர்வின் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளார். படத்தின் பணிகளை முடித்துள்ள படக்குழு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

 

இப்படத்தின் இசை குறித்து இயக்குநர் ஹரிஹரன் கூறுகையில்," திரைக்கதை எழுதும் போதே இசையுடன் சேர்த்து தான் படத்தையே யோசித்தேன். காதல் படங்கள் என்று வரும்போது, இசையும் காதலும் பிரிக்க முடியாதவை, மேலும் ‘என்ன சொல்ல போகிறாய்’ கதையை ரசிகர்களின் மனதில், இசையின் மூலம் உணர்வுப்பூர்வமாக உயிர்ப்பிக்க வேண்டும் என்று விரும்பினேன். விவேக் மற்றும் மெர்வின் இசையமைப்பில் இறுதி பதிப்பு மிக அற்புதமாக வந்திருப்பது கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ரசிகர்களும் அவ்வாறே உணர்வார்கள். மேலும் ஒவ்வொருவரும் இந்த இசையை பாராட்டுவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

 

இதனைத்தொடர்ந்து இசையமைப்பாளர்கள் விவேக் மற்றும் மெர்வின் கூறுகையில், "இயக்குநர் ஹரிஹரன் இந்த திரைக்கதையை விவரித்தபோது, என்ன சொல்ல போகிறாய் படம்  எங்களின் திறமையை முழுமையாக வெளிப்படுத்த உதவும் ஒரு அழகான படைப்பாக இருக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்பினோம். எங்களின் திறமையை நிரூபிக்கும் வாய்ப்பை வழங்கிய ஒரு படம் கிடைத்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் பாடல்களை கேட்பவர்கள் மனதிற்கு நெருக்கமாக உணர்ந்து பாராட்டும்போது, அதே போல் உணர்வை அவர்கள் பின்னணி இசையிலும் அடைவார்கள்  என்று நாங்கள் நம்புகிறோம்" என்றனர்.

 

நேற்று முன்தினம் வெளியான என்ன சொல்ல போகிறாய் படத்தின் நீதானடி பாடல் அனைவரின் கவனத்தை ஈர்த்து யூடியூப் தளத்தில் 6 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அஸ்வின் நடிக்கும் புதிய படம்

Published on 09/02/2023 | Edited on 09/02/2023

 

Ashwin Kumar next movie update

 

தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வின் சில படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பின்பு கடந்த ஆண்டு வெளியான 'என்ன சொல்ல போகிறாய்' படம் மூலம் ஹீரோவாக ஆனார். பின்பு 'மீட் கியூட்' என்ற தெலுங்கு ஆந்தாலஜி ஜானர் படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான 'செம்பி' படத்தில் நடித்திருந்தார்.  

 

இதனைத் தொடர்ந்து அஸ்வின் நடிக்கும் புது படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ழென் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார். ரொமாண்ட்டிக் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இப்படத்திற்கான மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன், அருள்நிதி நடிப்பில் உருவான 'தேஜாவு' திரைப்படத்தை இயக்கியவர். பின்பு இந்த படத்தை தெலுங்கில் 'ரிபீட்' என்ற தலைப்பிலும் ரீமேக் செய்திருந்தார். 

 

 

Next Story

மதம் சார்ந்த விவகாரம்; மன்னிப்பு கேட்ட பிரபு சாலமன்

Published on 29/12/2022 | Edited on 29/12/2022

 

prabu solomon sembi movie press show issue

 

தமிழ் சினிமாவில் மைனா, கும்கி, கயல் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குநர் பிரபுசாலமன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் 'செம்பி'. இதில் அஷ்வின் குமார், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நாளை (30.12.2022) வெளியாகவுள்ள இப்படத்தின் சிறப்புக் காட்சி இன்று நடைபெற்றது. பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் பிரபு சாலமன். 

 

அப்போது படத்தின் இறுதிக் காட்சியில், “உன்னிடத்தில் அன்பு கூறுவது போல பிரானிடத்திலும் அன்பு கூறுவாயாக இயேசு" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கிறிஸ்தவ மதத்தைத் திணிப்பதுபோல உள்ளது எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த பிரபு சாலமன், "அப்படி எந்த நோக்கத்திலும் நான் சொல்லவில்லை. சிறு வயதிலிருந்தே நான் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவன். அதில் பழக்கப்பட்டவன்." என்றார். குறுக்கிட்ட செய்தியாளர்கள், “படம் எடுத்தது நீங்கள். இயக்கம் பிரபு சாலமன் என்று குறிப்பிட்டிருக்கலாமே” என்றனர்.

 

இதற்குப் பதிலளித்த பிரபு சாலமன், "கிறிஸ்தவம் என்பது ஒரு மதமும் கிடையாது. மதத்தைப் பரப்ப இயேசுவும் வரக் கிடையாது. அன்பு மட்டும்தான் எங்களுடைய நோக்கம். அதைத்தான் சொல்லியிருக்கோம்" என்றார். பின்பு செய்தியாளர்களுக்கும் பிரபுசாலமனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு பிரபு சாலமன், "உங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்றார். இதனால் அங்கு சற்று பரபரப்பு நிலவியது.