Advertisment

"மிளகு ரசமும், அதுவும் இருந்தால் வாழ்க்கை ஆசம்"- தொற்று குறித்து நடிகர் விவேக்

உலகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்கள் இந்த கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை தடுக்கும் பொருட்டு ஒவ்வொரு நாடுகள் ஒவ்வொருவிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் இந்தியா ஊரடங்கு உத்தரவை மே 3ஆம் தேதிக்கு நீட்டித்துள்ளது. இதனால் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியேறுவோரை காவல்துறை கைது செய்கின்றனர்.

Advertisment

vivek

இந்நிலையில் நடிகர்விவேக் கரோனாகுறித்துவீடியோவெளியிட்டுள்ளார். அதில், "இந்தியா முழுவதும்கடந்த 25 நாட்களாகலாக் டவுனில் இருந்திருக்கிறோம். இப்போது இன்னும் கொஞ்சம் நாள் இருக்கப் போகிறோம். இவ்வளவு நாள் இருந்தது முக்கியமல்ல, இனிமேல் இருக்கப் போவதுதான்மிகவும் முக்கியம். மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் 130 கோடி மக்கள் தொகையைகொண்டுள்ளநம் நாட்டுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய வைரஸ் தொற்று என்பதுகுறைவு. அதற்குக் காரணமே ஊரடங்கைக் கடைப்பிடித்ததுதான்.

nakkheeran app

Advertisment

அரசு சொன்னபடி நாம் ஓரளவிற்கு நடந்திருக்கிறோம் என்பதுதான் இந்தக் கம்மியான பரவல்தெரியப்படுத்துகிறது. இதை இன்னும் குறைத்து நாம்இதிலிருந்து வெளியே வர என்ன செய்ய வேண்டும் என்றால், அடுத்து வரும் நாட்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும்.

வாய், மூக்கு இரண்டையும் மறைப்பது போன்ற முகக் கவசம் அணிய வேண்டும். கண் குறித்து கண் மருத்துவரிடம் கேட்டபோது, அதன் மூலம் பெரிய ஆபத்து இல்லை என்று சொன்னார்கள். வாய், மூக்கு இரண்டுமே கண்டிப்பாக முககவசத்தால் மூடியிருக்க வேண்டும். மக்கள் அனைவருமே வீட்டை விட்டு வெளியே சென்றால், கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். இரண்டு ரொம்ப,ரொம்ப முக்கியம். சாப்பாட்டுக்கு மிளகு ரசம், முகத்துக்கு முககவசம். இரண்டும் இருந்தால் வாழ்க்கை ஆசம். முகக் கவசத்தை கண்டிப்பாக அணியுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

actor Vivek
இதையும் படியுங்கள்
Subscribe