
அஜித் - சிவா கூட்டணியில் உருவாகும் 'விஸ்வாசம்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி சமீபத்தில் முடிவடைந்தது. இதையடுத்து இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் அஜித் இளமை தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் விவேக், யோகிபாபு, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் 40 சதவிகிதம் படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ளதால் இப்படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய்யின் 'சர்கார்' திரைப்படத்துடன் 'விஸ்வாசம்' படம் மோதும் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.