/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/irumbu thirai_1.jpeg)
கடந்த சில காலங்களாக சால்ட்-அண்ட் பெப்பர் லுக்கில் நடித்து வந்த அஜித் கடைசியாக நடித்த 'விவேகம்' படத்தில் வெள்ளை முடியுடன் நடித்தார். இதையடுத்து அவர் நடிக்கும் அடுத்த படமான 'விஸ்வாசம்' படத்தில் கறுப்பு முடியுடன் இளமையாக அஜித் நடிப்பார் என்று கூறப்பட்டது. அதற்கேற்றாற்போல் கறுப்பு முடியுடன் அவர் நிற்கும் படங்களும் சமீபகாலங்களில் வெளியாகின. மேலும் இப்படத்தில் அவர் நடிப்பதற்காகத்தான் டை அடித்து போஸ் கொடுத்தார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது ஐதராபாத்தில் 'விஸ்வாசம்' படப்பிடிப்பு தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் அஜித் கறுப்பு முடியுடன் இளமையான தோற்றத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அவர் வெள்ளை முடி வெள்ளை தாடியுடன் நடித்து வருகிறார். அதற்கு சான்றாக படப்பிடிப்பு தளத்தில் அஜித் மற்ற நடிகர்களுடனும், டி. இமானுடனும் எடுத்து கொண்ட புகைபடங்கள் வெளியாகியுள்ளன.இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்றும் அதில் இளைஞராகவும், வயதான தோற்றத்திலும் வருகிறார் என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி முதலில் வயதான தோற்றத்துக்கான படப்பிடிப்பு நடைபெறுவதாகவும், அதன் பிறகு இளமையான தோற்றத்துக்கு அஜித் மாறுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-05/dc0erbdv4aa44vs.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-05/dc0m8xhvqaev1-e.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-05/dcvmg6gvmaa4e75.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-05/dcvmirqvmaerjln.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-05/dcwb-7uvaaaopz6.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-05/dcz8iawu8aeuxps.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-05/dcz8jklv4aa9cvs.jpg)