ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாக நேற்று தொடங்கியது. படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக அஜித் நேற்று ஐதராபாத் புறப்பட்டு சென்ற புகைப்படங்களும் நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. வீரம் படத்தை போல் கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை தொடர்ந்து 25 நாட்கள் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதில் முதல் மூன்று நாட்கள் பாடல் காட்சியையும், பின்னர் ஆக்ஷன் மற்றும் கிராம சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படத்தின் முதல் நாளான நேற்று திருவிழா போன்ற வண்ணமயமான செட்டில் பாடல் காட்சி ஒன்றை படமாக்கக்கட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அந்த பாடல் காட்சி செட்டின் புகைப்படமும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் படத்தின் நாயகி நயன்தாராவும் தற்போது படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ஐதராபாத் புறப்பட்டு சென்றுள்ளார். மேலும் அஜித்தைப்போல் நயன்தாராவும் ஹைதராபாத் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக விமான நிலையம் சென்றபோது அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படமும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-05/dcmq2fyuqaai9zg.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-05/dcmxrndu8aamy-k.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-05/dcpca2qu0aakc_s.jpg)