style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவாகும் 'விஸ்வாசம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டி, ராஜமுந்திரி மற்றும் மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதுரை மற்றும் தேனியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் அஜித் ‘தூக்கு’ துரை என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மிகப்பெரிய ஆடிட்டோரியம் ஒன்றில் 'விஸ்வாசம்' படத்தின் முக்கிய நடிகர்கள் அனைவருடன் ஏராளமான ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளை வைத்து படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாரா நாயகியாக நடித்து வரும் இப்படம் வருகிற பொங்களன்று வெளியாகவுள்ளது. மேலும் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.