Advertisment

'உங்கமேல கொலகோவம் வரணும்... ஆனா உங்கள எனக்கு பிடிச்சிருக்கு சார்' - கொலமாஸான விஸ்வாசம் ட்ரைலர்

viswasam

Advertisment

சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரித்து அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவாகியிருக்கும் 'விஸ்வாசம்' படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக தயாராகி வருகிறது. படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல பெற்று வரும் நிலையில் இப்படத்திற்கு தணிக்கைக் குழுவில் `யு' சான்றிதழை பெற்றுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் ட்விட்டரில் அதிகாரப்பூர்மாக அறிவித்தது. இதையடுத்து படத்தின் டீசர் எப்போது ரிலீசாகும் என்று அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் படத்தின் ட்ரைலர் இன்று மதியம் 1.30 மணிக்கு வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியது படக்குழு. இந்நிலையில் 'விஸ்வாசம்' படத்தின் ட்ரைலர் அறிவித்தபடி தற்போது வெளியாகியுள்ளது. மதுரை பின்னணியில் அஜித் தூக்கு துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார்.

{"preview_thumbnail":"/s3/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/TiDyv53adt0.jpg?itok=zQ3DQ4S4","video_url":" Video (Responsive, autoplaying)."]}

ajith siva viswasam sathyajothifilms
இதையும் படியுங்கள்
Subscribe