Published on 30/12/2018 | Edited on 30/12/2018

சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரித்து அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவாகியிருக்கும் 'விஸ்வாசம்' படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக தயாராகி வரும் நிலையில் படத்தின் ட்ரைலர் இன்று மதியம் 1.30 மணிக்கு வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. ட்ரைலர் வெளியான 1 மணி நேரத்தில் 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது வருகிறது. மேலும் சிறுது நேரத்திலேயே ட்விட்டர் உலக ட்ரெண்டிங்கிலும் இடம்பிடித்து வரலாறு படைத்து வருகிறது.மேலும் முதலிடத்தில் இருந்த பேட்ட ட்ரைலரையும் பின்னுக்கு தள்ளியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்து வருகின்றனர். மதுரை பின்னணியில் அஜித் தூக்கு துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார்.