/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/DudkO24V4AAF5IT.jpg)
சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரித்து அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவாகியிருக்கும் 'விஸ்வாசம்' படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக தயாராகி வரும் நிலையில் படத்தின் ஆடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் டீசரின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அந்த விருது விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சிவா..."பத்து நாட்களுக்குள் படத்தின் டீசரை எதிர்பார்க்கலாம்" எனக் கூறியிருக்கிறார். எனவே, அதன்படி பார்த்தால் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று டீசர் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை பின்னணியில் உருவாகும் இப்படத்தில் அஜித் தூக்கு துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஜித் ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கும் இப்படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)