வெளியானது விஸ்வாசம் சிங்கிள் பாடல்... ரசிகர்கள் உற்சாகம் !

viswasam

சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரித்து அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவாகியிருக்கும் 'விஸ்வாசம்' படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக தயாராகி வரும் நிலையில் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில் இப்படத்தின் சிங்கிள் பாடலான 'அடிச்சித்தூக்கு' பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என்று சில மணிநேரத்திற்கு முன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அடிச்சித்தூக்கு பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

மதுரை பின்னணியில் உருவாகும் இப்படத்தில் அஜித் தூக்கு துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஜித் ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கும் இப்படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசைமைத்துள்ள இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

{"preview_thumbnail":"/s3fs-public/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/2AQDaJTrjoI.jpg?itok=XvuQMYXP","video_url":" Video (Responsive, autoplaying)."]}

ajith siva viswasam sathyajothifilms
இதையும் படியுங்கள்
Subscribe