Published on 26/06/2018 | Edited on 26/06/2018

அஜித் - சிவா கூட்டணியில் உருவாகும் 'விஸ்வாசம்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி சமீபத்தில் முடிவடைந்தது. இதையடுத்து இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு வட மாநிலங்களில் நடைபெறவுள்ளதாக செய்திகள் பரவி வந்தன. இதற்கிடையே பெரும்பாலும் அஜித் படங்களின் படப்பிடிப்பு தொடர்ந்து வெளி மாநிலங்களில் நடைபெறுவதால் தமிழ்நாட்டில் இருக்கும் சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக அவ்வப்போது சர்ச்சைகளும் கிளம்பின. இந்நிலையில் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் 27 ஆம் தேதி முதல் சென்னையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வட மாநில பிரச்சனைக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. டி.இமான் இசையமைக்கும் இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.