ajith

'விவேகம்' படத்தை அடுத்து நடிகர் அஜித் தற்போது சிவா இயக்கும் 'விஸ்வாசம்' படத்தில் நடிக்க உள்ளார். இருவரும் நான்காவது முறையாக கூட்டணி அமைத்துள்ள இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் டி.இமான் இசையில் உருவாகும் இப்படத்தில் யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதமே தொடங்க இருந்த நிலையில் சினிமா ஸ்ட்ரைக் காரணாமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக நடைபெற்ற ஸ்டிரைக் சமீபத்தில் முடிந்ததையடுத்து 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் 4ஆம் தேதி ஐதராபாத்தில் துவங்கி, படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment