கடந்த மார்ச் மாதம் தொடங்கி சமீபத்தில் கைவிடப்பட்ட சினிமா ஸ்ட்ரைக் காரணமாக பல்வேறு சினிமா நிகழ்ச்சிகள், பட வெளியீடு, மற்றும் படப்பிடிப்புகள் ஆகியவை தள்ளிப்போயின. இதன் காரணமாக தள்ளிவைத்திருந்த சினிமா நிகழ்வுகள் அனைத்தும் தற்போது படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அஜித் - நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் படம் 'விஸ்வாசம்'. சிறுத்தை சிவா நான்காவது முறையாக அஜித்தை இயக்கவுள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது ஆரம்பிக்கும் என அஜித் ரசிகர்கள் ஆவலாக காத்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஐதராபாத்-ல் தொடங்கிறது. இதற்காக நடிகர் அஜித் ஐதராபாத் செல்ல விமான நிலையத்துக்கு சென்ற அவரின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. மேலும் படப்பிடிப்பு தளத்தில் தயாராக வைக்கப்பட்டுள்ள கேமராவின் புகைப்படமும் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து ஐதராபாத்தில் 'விஸ்வாசம்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து 25 நாட்கள் நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஸ்டார்ட் கேமரா... ஆக்சன்... தொடங்கியது 'தல' படம்
Advertisment
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-05/dchofg8uwaa1h4n.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-05/dchlma6u8aacj9j.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-05/dchmlqwu0aarpwh.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-05/dcj1aghvqaafkcl.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-05/dckrve0waaafr1b.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-05/dchgyi6w4aak0iv.jpg)