விஸ்வாசம் செண்டிமெண்ட்... மீண்டும் ரஜினியுடன் மோதுகிறதா சத்யஜோதி பிலிம்ஸ்...

2019ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் விஸ்வாசம் படத்தை வெளியிட்டது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம். இந்த படம் ரஜினியின் பேட்ட படத்துடன் போட்டிப்போட்டது. இருந்தாலும் இந்த படம் பலதரப்பு மக்களையும் ஈர்த்தது. இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது விஸ்வாசம் படம்.

pattas

இதேபோல, சத்யஜோதி பிலிம்ஸ் தற்போது தயாரித்து வரும் படமான பட்டாஸ் படத்தையும் 2020 பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தவருட 2020 பொங்கலுக்கு லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படம் வெளியாக இருப்பதாக முன்னமே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சத்யஜோதி பிலிம்ஸ் இந்தவருட பொங்கல் ரிலீஸ் செண்டிமெண்டை முன்னிட்டு தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் பட்டாஸ் படத்தை ரஜினியின் தர்பார் படத்துடன் வெளியிட திட்டமிட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

துரை.செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பட்டாஸ் படத்தில் இரட்டை வேடத்தில் தனுஷ் நடித்துள்ளார். சிநேகா, மெஹ்ரீன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதரக் காட்சிகளின் இறுதிக்கட்டப் பணிகள் முடித்து தயாராக வைத்துள்ளது படக்குழு. தற்போது படமாக்கும் காட்சிகளைத் தயார் செய்து இணைத்தால், மொத்த படமும் தயாராகிவிடும்.

அடுத்த வருட பொங்கல் விடுமுறை சுமார் எட்டு நாட்கள் வரை இருக்கிறது என்பதால் கண்டிப்பாக ஒரு படம் மட்டும் ரிலீஸாக வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

DHANUSH pattas
இதையும் படியுங்கள்
Subscribe