style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவாகும் 'விஸ்வாசம்' படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புள் முடிந்து மீதம் உள்ள பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு மும்பையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் நாளை காலை 10.30 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது லுக் போஸ்டர் நாளை வெளிவரும் செய்தி கேட்டு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடனும், உற்சாகத்துடனும் காணப்படுகின்றனர். அஜித் இரு வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார்.