Published on 25/10/2018 | Edited on 25/10/2018

அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவாகும் 'விஸ்வாசம்' படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புள் முடிந்து மீதம் உள்ள பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு மும்பையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் இன்று காலை 10.30 மணிக்கு வெளியாகியுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது வெளியான இரண்டாவது லுக் போஸ்டரும் ஹிட்டடுத்துள்ளது. பொங்கல் வெளியீடு என்று குறிப்பிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள இந்த போஸ்டரை ரசிகர்களும் இதை உற்சாகத்துடன் சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். அஜித் இரு வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார்.