viswasam

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவாகியிருக்கும் 'விஸ்வாசம்' படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக தயாராகி வரும் நிலையில் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரித்துள்ள இப்படம் நல்ல தொகைக்கு விலைபோனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மதுரை பின்னணியில் உருவாகும் இப்படத்தில் அஜித் தூக்கு துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஜித் ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கும் இப்படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் 'விஸ்வாசம்' படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.