அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவாகும் 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் தொடங்கிய இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அஜித் மற்றும் வில்லன் ரவி அவனா சம்பந்தப்பட்ட சண்டைக்காட்சி புகைப்படங்கள் தற்போது லீக் ஆகியுள்ளது. சற்று முன் சமூகவலைத்தளங்களில் வெளியான இப்புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.