Published on 26/11/2018 | Edited on 26/11/2018

அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவாகும் 'விஸ்வாசம்' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், யோகிபாபு, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் 'விஸ்வாசம்' படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று திடீரென்று வெளியாகி ரசிகர்களை இன்பஅதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் அந்த மோஷன் போஸ்டரில், 'விஸ்வாசம்' படம் பொங்கலுக்கு வெளியாகும் என குறிப்பிட்டு ரிலீஸ் தேதியை மேலும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது படக்குழு. மேலும் இதுவரை 2மில்லியன் பார்வையாளர்களையும், 3லட்சம் லைக்குகளையும் கடந்து சாதனை படைத்து வருகிறது.