2.0 படத்தில் மாஸ் காட்டிய தூக்குதுரை...

ajith

2.0 படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிவிட்டது. இந்த படம் கடந்த மூன்று ஆண்டுகளாக எடுக்கப்பட்டு, இன்றுதான் திரையரங்குகளில் வெளியாகிறது. பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்ட படம், இந்திய சினிமாவில் அதிக தொகை செலவிட்ட படமாகியுள்ளது. இந்த படத்தில் தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மட்டுமல்லாமல் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளதால் இந்தியா முழுவதும் பெரும் எதிர்ப்பார்ப்பை தூண்டியது. இந்நிலையில் இன்று 2.o படம் வெளியாகியுள்ளது. படம் அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் அஜித் நடிப்பில் பொங்கல் அன்று வெளியாகவுள்ள விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. இந்த வீடியோ சில சாதனைகளையும் படைத்து வருகிறது. இந்நிலையில், 2.0 வெளியான தியேட்டரில் இடைவேளை நேரத்தின்போது விஸ்வாசம் மோஷன் போஸ்டர் போடப்படுகிறது. அதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது 2.0 படத்தின் இடைவேளையில் விஸ்வாசம் போஸ்டர் வெளியானபோது நடந்த கொண்டாட்டத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் அஜித் ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்
Subscribe