Advertisment

விஸ்வாசம்தான்  முதலிடமா?.. ட்விட்டர் இந்தியா விளக்கம் 

இந்த வருட தொடக்கத்தில்அஜித் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' படம் பலசாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. அந்த வகையில் 2019ஆம் ஆண்டுக்கான ட்விட்டர் ட்ரெண்டிங்கில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய ஹேஸ்டேகுகள் வரிசையில் விஸ்வாசம் முதலிடம் பிடித்ததாக தகவல்கள் வெளியாகின.

Advertisment

twitter

2020 ஆம் ஆண்டிற்கான ட்விட்டர் கூட்டம் நடைபெற்றது. அதில், அதிக தாக்கத்தை ஹேஸ்டேகுகள் பட்டியல் திரையிடப்பட்டபோது, அதில் விஸ்வாசம் ஹேஸ்டேக் முதலிடத்தில் இருப்பதாக காட்டப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள ட்விட்டர் இந்தியா,“இந்த ட்வீட்டைப் பற்றி நீங்கள் உற்சாகமாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், ஆனால் இது இந்த ஆண்டின்சில செல்வாக்குமிக்க தருணங்களின் பிரதிநிதித்துவம் மட்டுமே. இந்த ஆண்டிற்கான முழுமையான அதிகாரப்பூர்வ ஹேஸ்டேகுகளின் வரிசைகளை தெரிந்துகொள்ள நீங்கள் இன்னும் சிறிதுகாலம் காத்திருக்க வேண்டியிருக்கும்” என தெரிவித்துள்ளது.

Vijayan

ACTOR AJITHKUMAR viswasam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe