Advertisment

தேசிய அரசியலையும் விட்டுவைக்காத அஜித் ரசிகர்கள்...தேர்தலை பின்னுக்குத் தள்ளிய அஜித் படம்!

நேர்கொண்ட பார்வை படம் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. பாலிவுட்டில் பிங்க் என்ற தலைப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படத்தின் தமிழ் ரீமேக்தான் இப்படம். இதில் அமிதாப் கதாபாத்திரத்தில் அஜித்குமார் நடித்திருந்தார். டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார். ஹெச்.வினோத் இயக்கிய இந்த படத்திற்கு விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாகவே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் இணைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

Advertisment

viswasam

முன்னதாக இந்த வருட தொடக்கத்தில் அஜித் நடிப்பில் விஸ்வாசம் படமும், ரஜினி நடிப்பில் பேட்ட திரைப்படமும் ஒரே நாளில் வெளியானது. இவ்விரு திரைப்படங்களும் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. அதில அஜித்தின் விஸ்வாசம் படம் குடும்பங்களை கவரும் வண்ணம் இருந்ததால் 50 நாட்கள் வரை திரையரங்களில் ஓடியது. வசூலிலும் 200 கோடிகளுக்கு மேல் வசூலித்தது. வசூலில் பல சாதனைகளை படைத்திருந்தது இந்த படம். அச்சமயத்தில் அஜித் ரசிகர்கள் என்று பலரும் விஸ்வாசம் படம் குறித்தே ட்விட்டரில் நிறைய ஹேஸ்டேக் ட்ரெண்ட் செய்ததால் இந்த வருட முதல் அரை இறுதியில் அதிகம் ட்ரெண்ட் செய்யப்பட்ட ஹேஸ்டேகாக விஸ்வாசம் இருக்கிறது.

இதனையடுத்துதான் இந்த வருடம் நடைபெற்ற மக்களவை தேர்தல் ஹேஸ்டேக், கிரிக்கெட் உலகக்கோப்பை ஹேஸ்டேக், மஹரிஷி மற்றும் நியூ புரோபைல் பிக் ஹேஸ்டேக் உள்ளிட்டவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ACTOR AJITHKUMAR viswasam
இதையும் படியுங்கள்
Subscribe