viswasam

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜித் - நயன்தாரா இணைந்து நடித்து பொங்கலன்று வெளியான 'விஸ்வாசம்' படம் வெற்றிகரமாக 4 வாரங்களை கடந்து 5வது வாரத்தில் அடி எடுத்து வைத்துள்ளது. சிவா இயக்கத்தில் வெளியான இப்படத்தின் வசூல் குறித்து சமீப நாட்களில் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்து படத்தை வாங்கி வெளியிட்ட கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்....

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

"விஸ்வாசம் படம் எல்லா சந்தேகங்களையும் தகர்த்தெறிந்து தமிழ் சினிமாவின் மிகப்பெரும் பிளாக்பஸ்டர் படமாக உருவெடுத்துள்ளது. விநியோகஸ்தர் என்ற முறையில் 'விஸ்வாசம்' படம் சரித்திரம் படைக்கும் வெற்றி பெற்றதை கர்வமாகவும், நமபிக்கையுடனும் இதன் மூலம் நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். இன்னமும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், உங்களுடைய கவலைகளுக்கும், கேள்விகளுக்கும் எங்களுடைய அலுவலக கதவு எப்போதும் திறந்தே இருக்கும். தயாரிப்பாளர், விநியோகஸ்தர், பங்குதாரர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என அனைவருக்கும் இது லாபகரமாக அமைந்துள்ளதால் படத்தை கொண்டாடி வருகின்றனர். மேலும் இதை கொண்டாட ரசிகர்களாகிய உங்களுக்கு நேரம் வந்துவிட்டது. சந்தேகமே இல்லாமல் 'விஸ்வாசம்' ஒரு மிகப்பெரும் வெற்றி படம்" என அறிவித்துள்ளனர்.