ADVERTISEMENT

‘எனக்கும் அஜித் சாருக்கு ஒருமுறை ஆர்கியுமெண்ட் வந்தது’- சிவா

02:59 PM Jan 09, 2019 | santhoshkumar


விஸ்வாசம் ரிலீஸாகப் போகிறது. நீங்கள் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறீர்கள்?

ADVERTISEMENT

ஒவ்வொரு படம் ரிலீஸாகும்போது ஆர்வமாக இருக்கும். ஆனால், இப்போது மிகவும் திருப்தியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன். இது மிகவும் சிறப்பான பொங்கலாக இருக்கும் என நினைக்கிறேன்.

ADVERTISEMENT

உங்களுக்கு அஜித் சாரிடம் ஒன்லைன் சொல்வதற்கு எப்போது நேரம் கிடைக்கிறது. எப்படி அஜித் கதை கேட்கிறார். எப்படி அடுத்த படம் இதுதான் என கமிட் ஆகிறீர்கள்?

வீரம் முடித்தபிறகு ஒரு வருடம் எந்த வேலையும் பார்க்கவில்லை. அப்போதுதான் வேதாளம் படத்திற்கான திரைக்கதை எழுத தொடங்கினேன். அடுத்து விவேகம் படம் எடுக்கும்போதுதான் கேப் இல்லாமல் உடனடியாக எடுத்துவிட்டோம். ஆனால், விவேகம் முடிந்தவுடன் ஆறுமாதம் கேப்பில் விஸ்வாசம் படத்திற்கான திரைக்கதையை எழுதிவிட்டுதான் படத்தை தொடங்கினோம். விவேகம் 2017 ஆகஸ்ட்டில் வெளியானது, 2018 மே மாதத்தில்தான் விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங்கை தொடங்கினோம். 9 மாதம் திரைக்கதையை எழுத நேரம் எடுத்துகொண்ட பிறகுதான் விஸ்வாசம் படபிடிப்பிற்கு சென்றோம்.

ஒரு படம் எடுக்கும்போது வேறோரு படம் பற்றி பேசுவதில்லை?

ஒரு படம் எடுக்கும்போது, அந்த படத்தை பற்றிதான் சிந்தனை செயல் எல்லாமே அதில்தான் இருக்கும்.

அஜித் எதை வைத்து இந்த படத்தை கண்டிப்பாக பண்ணலாம் என்று கூறினார்?

காமெடி மாஸ் எமோஷன் கலந்த ஜானரில் படம் பண்ணலாம் என இரண்டு பேருமே பேசி இருந்தோம். எந்த ஜானரில் படம் பண்ணலாம் என்று அஜித் சொல்வார். அவர்தான் கிராம சப்ஜெக்ட்டில் படம் பண்ணலாம் என்றார். ஆனால், இது கிராம படமாக மட்டுமே இல்லாமல், ஒரு சிட்டி பாகமும் இந்த படத்தில் உள்ளது. அதனால் ஒரு பாதி கிராமத்திலும், ஒரு பாதி படம் சிட்டியிலும் நடக்கும். இரண்டு கதாபாத்திரங்கள், நிறைய மாஸ் காட்சிகள், குடும்ப செண்டிமண்ட் என்று அனைத்துமே கலந்துள்ள ஒரு படமாக இது இருக்கும். இந்த கதையை அஜித்திடம் சொல்லும்போது அவரிடம் உற்சாகத்தை உணர முடிந்தது. இதுவரை நிறைய முறை அவரிடம் கதை சொல்லியிருக்கிறேன், ரசித்து சிரித்து என்னை பாராட்டி சூப்பராக இருக்கிறது சிவா என சொல்லியது இந்த படத்தின் கதை சொல்லும்போதுதான். அவர் என்ஜாய் செய்த அனைத்தும் படத்தில் இருக்கிறது.

சமூகவலைதளத்தில் சிவா-அஜித் கூட்டணியில் விஸ்வாசம்தான் அஜித்துக்கு மிகவும் பிடித்தது என செய்தி வந்தது. இது நிஜமா?

அவருக்கு அனைத்து படமுமே பிடிக்கும், ஆனால் விஸ்வாசம்தான் பெஸ்ட் என்றார்.

சிவாவிடம் பிடித்தது என்றால் முதலில் வசனம்தான். விஸ்வாசத்தில் என்ன இருக்கிறது?

ட்ரைலருலேயே பார்த்திருப்பிங்க, அஜித் மதுரை பாஷை பக்காவா பிடித்துவிட்டார். மதுரை பாஷை மிகவும் அழகாகவும் ரம்மியமாகவும் இருக்கும், அதை மிக அழகாக பேசியிருக்கார். என்னுடைய அனைத்து படங்களுக்கும் வசனம் எழுதியிருக்கேன், இதிலும் எழுதியுள்ளேன். அதுதான் இந்த படத்தின் பலமாக இருக்கும் என நினைக்கிறேன்.

2014 பொங்கலுக்கு அடுத்து ரசிகர்கள் மீண்டும் அஜித்தை பொங்கலுக்கு சந்திக்கிறோம், அதேபோல தலைவரும் வரார். ஒரு ரசிகனாக இந்த பொங்கலுக்காக எவ்வளவு ஆர்வமாக இருக்கிறீர்கள்?

ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன். பொங்கல் என்றாலே எனக்கு மிகவும் ஸ்பெஷல், என்னுடைய தாத்தாவின் முதல் படம் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ பொங்கலுக்குதான் ரிலீஸானது. என்னுடைய முதல் படம் சிறுத்தையும் பொங்கலுக்குதான் ரிலீஸானது. அடுத்த படமான வீரமும் பொங்கலுக்குதான் ரிலீஸானது. அனைத்து பொங்கலுமே எனக்கு மறக்கமுடியாத ஒரு பொங்கலாகதான் இருந்திருக்கிறது. இந்த முறையும் ஒரு சந்தோஷமான பொங்கலாக இருக்கும் என நம்புகிறேன்.

விஸ்வாசம் தீபாவளிக்கு வரவேண்டியது. ஸ்ட்ரைக்கினால் தள்ளிப்போவதாக முன்னமே அறிவித்து பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. திடீரென பொங்கலுக்கு வந்ததுதான் ‘பேட்ட’, அதனால் எதுவும் சின்ன ஏமாற்றம் அடைந்தீர்களா?

ஒரு வேலைக்கு கமிட்டாகிவிட்டோம், நம்முடைய கவனம் முழுக்க அதில்மட்டும்தான் இருக்க வேண்டும். மே 7ஆம் தேதி ஷூட்டிங் தொடங்கியபோதே தயாரிப்பாளர் ஜனவரி 10ஆம் தேதி படம் ரிலீஸாக வேண்டும் என்றார். நானும் வாக்கு கொடுத்துவிட்டேன். அதனால் என் கவனம் முழுக்க அதில் மட்டுமே இருந்தது. மத்தபடி வேறு எந்த விஷயமும் எனக்கு சிந்தனையில் ஓடாது. இப்போது ஒரு வாரத்திற்கு முன்பே தயாரிப்பாளரிடம் கொடுக்க வேண்டிய அனைத்தையும் கொடுத்துவிட்டேன். இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னொரு படம் வரலாம், இரண்டு பெரிய படங்கள் வரவேண்டும் இரண்டுமே நன்றாக ஓடவேண்டும். இரண்டு படங்கள் மோதிக்கொள்கிறது என்பதை நான் ஒப்புகொள்ளவே மாட்டேன். இரண்டு படங்கள் ஒன்றாக வருகிறது அவ்வளவுதான். அஜித் எப்போதுமே சொல்வார், நான் வேலை பார்ப்பதற்காக சினிமாவுக்கு வந்துள்ளேன். யாரிடமும் மோதுவதற்காகவும், அரசியல் செய்வதற்காகவும் நான் அவரவில்லை. ஒரு வேலை பார்ப்பதற்காக வந்திருக்கிறேன். அதை நான் சின்சியராக செய்கிறேன் அவ்வளவுதான் என்பார்.

அஜித்தின் கதாபாத்திரத்தின் பெயர் தூக்குதுரை என்று வைத்ததற்கு எதேனும் காரணம் இருக்கிறதா?

இது எந்த ஒரு உண்மையான கதாபாத்திரத்திலிருந்து வைக்கவில்லை. தேனி பகுதியில் அதிகம் பயன்படுத்தப்படும் பெயர் அதனால் தூக்குதுரை என்று வைத்தோம். இந்த படத்தில் இருக்கும் அனைத்து கதாபாத்திரங்களின் பெயரும் அப்படித்தான் இருக்கும்.

இந்த படத்தில் காமெடிக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது. யோகி பாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா என மூன்று காமெடியன்கள் இருக்கிறார்கள்?

இந்த படத்தில் காமெடிக்கு முக்கியத்துவம் அதிகமே இருக்கிறது. இந்த மூன்று பேருடன் விவேக், கோவை சரளா ஆகியோரும் இருக்கின்றனர். குடும்பம் குடும்பமாக வந்து பார்க்கும் திரைப்படமாக இது இருக்கும்.

அஜித்துக்குள்ள பாசிடிவ் கேரக்டர் மற்ற யாருக்கும் தெரியாத ஒன்று எங்களுக்காக சொல்லுங்க?

தொழிலுக்கு எவ்வளவு சின்சியராக இருக்க முடியுமோ அவ்வளவு சினிசியராக இருப்பார். நான் ஒருவேளை நடிக்க வரவில்லை என்றாலும் வேறு வேலை பார்ப்பேன். வேலை பார்ப்பதுதான் என்னுடைய மோடிவ் என்று சொல்வார்.

இத்தனை படங்களில் அஜித் எதேனும் ஒன்றை சொல்லி அது செம ஹிட் அடித்திருக்கிறதா?

அவர் மோஸ்ட்லி கதைக்குள் வரமாட்டார், முழுமையாக இயக்குனரை நம்பி நடிப்பவர். அவருக்கு நாம் சொல்வதில் ஏதேனும் மாற்று கருத்து இருந்தால் மிகவும் தன்மையாக நம்மிடம் வந்து சொல்வார். அது எனக்கு ஒப்புக்கொள்ளும்படி இருந்தால் ஏற்றுக்கொள்வேன். இந்த ஐந்த் வருடத்தில் ஒருமுறைதான் நாங்கள் இருவரும் வாதம் செய்திருக்கிறோம். வீரம் படத்தில் ரெயிலில் தொங்குவது போன்று ஒரு காட்சி வரும் அதை நான் சண்டைப்பயிற்சியாளர்கள் செய்யட்டும் என்றேன் ஆனால் அதை நான் தான் செய்வேன் என்று ஒரு மணி நேரமாக என்னுடன் விவாதம் செய்விட்டு அந்த காட்சியை அவரே செய்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT