அஜித் மற்றும் சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவான படம்தான் விஸ்வாசம். இது நேற்று வெளியானது. இதனுடன் ரஜினி நடிப்பில் உருவான பேட்ட படமும் வெளியானது. இந்த இரு படங்களும் ஒரே நாளில் வெளியானதால், தியேட்டர்கள் திருவிழாக் கோலமாக காட்சியளித்தது.இரண்டு படங்களுமே நல்ல விமர்சனத்தையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

Advertisment

இந்நிலையில், விஸ்வாசம் படம் தெலுங்கு படம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டது, அதை போலவே இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் சிலர் விமர்சித்து வருகின்றனர். 2007-ம் ஆண்டு தெலுங்கில் வெங்கடேஷ், நயன்தாரா நடிப்பில் வெளியான படம் துளசி. இந்த படத்திற்கும் விஸ்வாசம் படத்திற்கும் கரு ஒன்றாகவே இருக்கிறது. ஆனால், முன்னும் பின்னும் வேறாக இருப்பதால் இயக்குனர் சிவா இந்த படத்திலிருந்துதான் கருவை எடுத்து, பின்னர் பூசி வேறு மாதிரி எடுத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

Advertisment