/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/maxresdefault_0.jpg)
‘விவேகம்’ படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'விஸ்வாசம்' படத்தில் சிவா, அஜித் கூட்டணி நான்காவது முறையாக இணையவுள்ளது. இதில் அஜித் ஜோடியாவது நயன்தாரா நடிக்கிறார் என்று படக்குழு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் சில நாட்களாக இசையமைப்பாளர் யார் என்பதில் குழப்பம் நீடித்த நிலையில், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத், சாம்.சி.எஸ் உள்ளிட்ட பெயர்கள் அடிபட்டன. இதன் பின்னர் டி.இமான் ‘விஸ்வாசம்’ படத்திற்கு இசையமைக்க இருப்பதாக சில நாட்களாக சமூக வலைதளங்களில் டிரெண்டாகி கொண்டிருந்தது. இந்நிலையில், இசையமைப்பாளர் டி.இமான் 'விஸ்வாசம்' படத்திற்கு இசையமைப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நேற்று உறுதிப்படுத்தியுள்ளது. இதனையடுத்து 'விஸ்வாசம்' படத்தின் மூலம் அஜித், டி.இமான் கூட்டணி முதல்முறையாக இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)