viswasam

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் திரைப்படத்தின் செகண்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. அதில் சுற்றிலும் திருவிழா கோலமாக இருக்க, நடுவில் அஜித் உற்சாகமாக இரு கைகளையும் தூக்கி TN 60 AB 2435 எண் கொண்ட புல்லட் வாகனத்தில் வருகிறார். இந்த செகண்ட் லுக் சோசியல் மீடியாவில் தற்போது வைரல் ஆகிவருகிறது. அஜித் வரும் புல்லட்டின் வாகன பதிவு எண்ணை குறித்து வைத்து அதன் விவரங்களை அதற்குள் கண்டுபிடித்து வெளியிட்டுவிட்டனர் ரசிகர்கள். அதன்படி அந்த எண்ணுக்குரிய வண்டி தேனி மாவட்டம், பெரிய குலத்தை சேர்ந்தது என்றும், அதன் உரிமையாளர் பெயர் பாண்டி என்றும், அது ஒரு ஸ்ப்ளெண்டர் பிளஸ் வண்டி என்றும், தகவலை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பரப்பி வருகின்றனர். அஜித் படத்தின் செகண்ட் லுக் மட்டுமல்லாது அதில் இடம்பெற்ற வண்டியும் தற்போது வைரலாகியுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை இன்னும் ஒரு படி அதிகரித்துள்ளது.

Advertisment

viswasam